திட்ட விவரம்

வெற்றிக்கான தேவ பாதைமாதிரி

God’s Path to Success

3 ல் 1 நாள்

அநேகம் பேர் வெற்றியை சரியாக கற்பனை செய்வதில்லை. அவர்கள் வெடிகளையும், மினுமினுப்பையும், அரங்கம் அதிரும் கரகோஷங்களையும் எதிர்பார்க்கிறார்கள். நமது சினிமாத் துறையும் சமூக வலைதளங்களும் தொழில் முறை விளையாட்டுகளும் வெற்றிக்கான மாயையான பிம்பத்தை உருவாக்கி உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த பொய்யான வெற்றிக்கான எதிர்பார்ப்பு உண்மையான வெற்றி வரும்போது தவற வைக்கிறது. அல்லது நமக்கு கிடைத்த வெற்றியை சரியாக  கொண்டாட முடியாமல் செய்கிறது. அதை கண்டு கொள்ள தவறுவதால், அடுத்த பெரிய காரியத்தை துரத்த ஆரம்பிக்கிறோம். அடுத்த காரியம் அதற்கடுத்த காரியம். நம்மை நாமே இந்த வாழ்வின் எலிப்பந்தயத்தில் வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறோம். 



நாம் பாழடைந்த உலகத்தில் வாழ்கிறோம், பாவம் மற்றும் அதின் விளைவுகளால் கறைபட்டு, வெற்றியின் பல மைல்கற்கள் எல்லாம் முடிந்ததும் கசப்பான இனிப்பாக இருக்கிறது. ஆவிக்குரிய வெற்றியின் இயல்பை புரிந்து கொள்ளவில்லை என்றால், நமக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஒன்றுக்காக முடிவில்லா தேடுதலில் சிக்கிக்கொள்வோம். இராஜ்ஜியத்தின் வெற்றியைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல், நமது நேரத்தை, தாலந்துகளை, பொக்கிஷங்களை எப்படி முதலீடு செய்வது என அறிந்து கொள்ள முடியாது. நாம் என்ன விதைக்கிறோம் என்பதே நாம் என்ன அறுப்போம் என்பதை தீர்மானிக்கிறது. ஆனால் நாம் உண்மையான வெற்றி எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாததால் பிசாசு நம்மை தவறான காரியங்களை விதைக்க வைக்கிறான். 



கடந்த சில வருடங்களில் நீங்கள் விதைத்த மிக சிறந்த மூன்று காரியங்கள் அல்லது தரிசனங்கள் என்ன?



அவை என்ன பலனை ஈந்தது, அவை தேவ ராஜ்ஜியத்தின் சித்தத்தோடு ஒத்துப் போகிறதா? 





நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

God’s Path to Success

எல்லோரும் வெற்றி அடைய விரும்புகிறார்கள், ஆனால் எல்லோரும் வெற்றி அடைவதில்லை ஏனெனில் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு  தவறான அர்த்தம் கொடுத்து அதை பின் தொடர்கிறார்கள். உண்மையான வெற்றியை அடைய உங்களை பார்வை தேவன் எதை வெற்றி ...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காகத் தி அர்பன் ஆல்டர்நேட்டிவ் (டோனி எவன்ஸ்)க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tonyevans.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்