திட்ட விவரம்

ஒற்றுமையின் வலிமைமாதிரி

The Power of Unity

4 ல் 1 நாள்

ஒற்றுமை என்றால் என்ன?



"பிரித்து வெல்லுங்கள்" என்கிற வாசகத்தை நீங்கள் அனைவரும் கட்டாயம் கேள்விபட்டிருப்பீர்கள். யுத்தங்களிலும் இந்த முறையை பின்பற்றி வெற்றிபெற்றவர்கள் சரித்திரத்தில் உண்டு. எதிரணியை பிரிப்பதினால், அவர்கள் தங்களின் சேர்ந்த அளவிலான பலத்தை இழந்து நலிவடைகிறார்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையோடும் கூட நம்முடைய சத்துருவாகிய பிசாசானவன் இதே யுக்தியை கையாளுகிறான். சபையை ஒன்றிணைய விடாதபடி பிரித்துவிட்டால், பிரிக்கப்பட்ட ஒற்றுமையற்ற சபையை அவன் கைப்பற்றுவது எளிதாகிவிடுகிறது.



ஆனால், ஒற்றுமையென்றால் என்றால் என்ன? அநேகர், 'ஒரே போல' இருப்பது தான் ஒற்றுமை என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல. ஒற்றுமையாக இருப்பதென்பது ஒரேவிதமாக இருப்பது அல்ல. மாறாக, ஒற்றுமையென்றால், விதவிதமான பின்னணியையும், குணங்களையும் கொண்டிருக்கும் மக்கள், ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்து, ஒரு தாய் மக்கள் போல தங்கள் தரிசனத்தை நோக்கி வேற்றுமைகளிலும் ஒன்று சேர்ந்து பயணிப்பது. அனைவரும் ஒரேவிதமாக இருக்கவேண்டுமென்பது அவசியம் இல்லை. அனைவருக்கும் ஒரே குறிக்கோள் இருந்தாலே போதுமானது. கால்பந்து விளையாட்டை உதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். கால்பந்து விளையாட்டு மைதானத்தில் வெவ்வேறு பகுதிபிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பகுதிகேன்று ஒவ்வொரு திறமைகள், குணங்கள், பொறுப்புகள் தேவைப்படும். ஆனால். ஒரு அணியின் வீரர்கள் அனைவரும் ஒரே திசையில் பந்தை எடுத்துச்செல்வார்கள். காரணம், அவர்கள் அனைவருடைய தரிசனமும் ஒன்றே!



இதிலிருந்து நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய காரியம் என்னவென்றால், நாம் அனைவரும் தேவனுடைய திட்டத்தின் கீழும் பலவிதமான பொறுப்புகளோடு, பலவித அனுபவங்களுடன், வேறுபட்ட குணங்கள், பழக்கங்களுடன் ஓடிகொண்டிருக்கிறோம். இது நம் தேவன் இயேசு தம்மையே மையப்படுத்தி உருவாக்கின உன்னத அமைப்பு. அவருக்குள்ளாக, வெவ்வேறு இனங்களை சேர்ந்த வேறுபட்ட நாம் அனைவரும் ஒரே சரீரமாக சபையாக ஒன்றிணைந்திருக்கிறோம். வேற்றுமைகள் பல இருந்தாலும் அவைகள் தேவனுக்குள்ளாக நாம் கொண்டிருக்கும் ஒற்றுமையை கெடுக்காத இடமாகவே சபையானது இருக்கவேண்டும். இயேசுவின் சுவிசேஷத்தை அகிலமெங்கும் பரவச்செய்து, தேவனுடைய இராஜியத்தை விரிவடைய செய்வதே நம் அனைவரின் ஒன்றுப்பட்ட தரிசனமாக இருக்க வேண்டும். உலகமெங்கும் உள்ள பலவிதமான தேவனுடைய விசுவாசிகள் ஒன்றிணைந்து, வேதாகம ஒற்றுமையில் பயணிக்கும்போது, நம்முடைய பொது எதிரியான பிசாசானவனால், நம்மை பிரிக்கவும் முடியாது, வெல்லவும் முடியாது. நாமே ஜெயம் கொள்பவர்களாக இருப்போம்.



தேவனுடைய சரீரமாகிய சபையில் தனித்துவமும் ஒற்றுமையும் எந்த வகையில் ஒன்றிணைந்து செயலாற்ற முடியும்?


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Power of Unity

மற்ற இன மக்களை ஏற்றுகொள்வது என்பது வேறு, அனைவரும் ஒரே இனமாக ஒற்றுமையாக வாழ்வது என்பது வேறு. இன்றைக்கு மக்கள் அநேகர் முந்தின வகையை சேர்ந்தவராகவே இருக்கின்றனர். நம்மை காட்டிலும் வேறுபட்ட இனமக்களையும் நாம் ஏற்றுக்கொள்வோம். ...

More

இந்த தியான திட்டத்தை வழங்கியமைக்காக Dr. டோனி இவான்ஸ் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களை அறிய https://tonyevans.org/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்