திட்ட விவரம்

நோக்கத்திற்கு இணங்க நிற்பதுமாதிரி

Step into Purpose

5 ல் 1 நாள்

தரையை உங்களால் தொடமுடியாமல் போகும் மட்டும்



உங்கள் நோக்கத்திற்குள் படியெடுத்து வைக்க தரிசனம் மிக முக்கியம்.



ஏசேக்கியேல் 47 ஆலயத்திலிருந்து வெளியே ஓடும் நதியை குறித்து சொல்கிறது, அந்த நதி மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஓடுகிறது (ஏசாயா 6:1-6). இந்த வேத பகுதி மிக வல்லமையானது ஏனென்றால் இது சொல்கிறது நீங்கள் தேவனுடைய நோக்கத்தை பின்பற்றினால், நீங்கள் நிச்சயம் அவர் உங்களுக்காக கொண்டிருக்கும் நோக்கத்தின் தரிசனத்தை பெற்றுக் கொள்வீர்கள்.



ஆனால், இந்த பகுதி சுட்டிக்காட்டுவது போல, உங்களுடைய சுலபமான பிரதேசத்தில் இது நடப்பதில்லை.



எசேக்கியேல் நான்கு நிலைகளுடன் சென்றார் காண்பதற்குமுன்னால். ஆகவே நாம் அநேக வேளை தேவனிடம் தம் நோக்கத்தை வெளிப்படுத்தும்படியாக கேட்கிறோம், ஆனால் நாம் வெறும் முழங்கால் ஆழம் மட்டுமே செல்ல தயாராக இருக்கிறோம். எசேக்கியேல் காணும் தரிசனம் தேவனுடைய பரிசுத்தத்திற்கு அருகாமை செல்லும்போது பரிபூரண ஜீவனை காட்டுகிறது (நதி, சங்கீதம் 1:1-3). திசைமாறி செல்லும் காரியங்கள் தேக்க நிலையையும் ஜீவனற்ற நிலையையும் கொண்டுவருகிறது (எசேக்கியேல் 47:11).



உங்களுக்கு உங்களுடைய நோக்கத்திற்காக தெளிவு மற்றும் நிலைநிறுக்கும் தரிசனம் வேண்டுமென்றால், உங்களுடைய எல்லையை தாண்டி தேவனோடு ஒரு உறவுக்குள்ளாக நீங்கள் செல்லவேண்டும். நீங்கள் மூழ்கி இருந்து, கால்கள் உங்கள் தரையை தொடாத நிலையில் செல்லவேண்டும். இந்த இடத்தில் தான் உங்களுடைய கட்டுப்பாடுகளை கைவிட்டு, அதற்கு மாறாக ஜீவனின் பூரணத்தை கொண்டிருக்கும் உங்கள் நோக்கத்தை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.






கான்டெஸ் டோஸாஸ் எழுதியது


நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Step into Purpose

என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக C3 சபை சிட்னி-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.c3college.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்