திட்ட விவரம்

ஏன் ஈஸ்டர்?மாதிரி

Why Easter?

5 ல் 1 நாள்

கர்த்தர் நமக்கு எதற்காக வேண்டும்?

நானும் நீயும் கர்த்தருடன் உடன்படிக்கையில் வாழப்பிறந்தவர்கள். அந்த உடன்படிக்கையை நாம் உணரும்வரை வாழ்க்கை வெறுமையாய் இருக்கும். அதன் விளைவாக வாழ்க்கையில் ஓர் இடைவெளியை உணருவோம். இதனை ஓர் ராக் பாடகர் கூறினார், “என்னுள் ஆழ்ந்த வெற்றிடத்தை உணர்ந்தேன்.”



எனக்கு ஓர் பெண்மணி இயற்றிய கடிதத்தில், “ஆழ்ந்த வெற்றிடம்” என்றாள். மற்றொரு நங்கை என்னிடம், “அவள் ஆன்மாவில் ஒரு துண்டு காணப்படாததைப்” பற்றிப் பேசினாள்.

இந்த வெற்றிடத்தை நிரப்ப மக்கள் பலவிதங்களில் முயலுவார்கள். சிலர் இந்த இடைவெளியை பணத்தால் நிரப்ப முற்பட்டு சோர்ந்து போவார்கள். அரிஸ்டாடில் ஒனாஸிஸ், உலகத்தின் பெரிய பணக்காரர்களில் ஒருவர், தனது வாழ்க்கையின் இறுதியில், “மனிதன் வாழத் தேவையானவற்றை கோடிக்கணக்கான பணம் சேர்ந்து நிரப்பாது” என்றார்.



மற்றவர்கள் மது போதை மற்றும் பாலியல் ஒழுக்கமின்மையை முயற்சிப்பார்கள். ஒரு பெண் என்னிடம் கூறினாள், “இவை அனைத்தும் உடனடியாக ஓர் முழுமையைக் கொடுத்தாலும் சிறிது காலத்தில் ஒரு வெற்றிடத்தை விட்டுச் செல்வதை உணரலாம்”. இன்னும் பலர் கடின உழைப்பு, சங்கீதம், விளையாட்டு மற்றும் வெற்றியைப் பின்பற்றுதல் போன்றவற்றை முயற்சிப்பார்கள். இவை அனைத்தும் தவறானதல்லவென்றாலும், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள வாஞ்சையை திருபதி செய்யாது.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Why Easter?

ஈஸ்டரைக் குறித்த மிகவும் முக்கியமானது என்ன? ஏன் 2000 வருடங்களுக்கு முன் பிறந்த ஒரு மனிதர் மீது இவ்வளவு அதிகமான ஆர்வம்? ஏன் பல மக்கள் இயேசுவைக்குறித்து உற்சாகமாக உள்ளனர்? ஏன் நமக்கு அவர் தேவை? எதற்காக அவர் வந்தார்? எதற்கா...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஆல்பா மற்றும் நிக்கி கும்பெல் அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://alpha.org/ க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்