திட்ட விவரம்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவதுமாதிரி

Using Your Time for God

4 ல் 1 நாள்

"உங்கள் நேரத்தை பிரயோஜனமாக பயன்படுத்துவது" நான் பள்ளியில் இருக்கும் போது, மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்பார்கள், "உனக்கு பிடித்தமான பாடம் எது?" என்று. அனேக நேரங்களில், என் பதில் இந்த இரண்டில் ஒன்றாக இருந்தது. "இடை வேளை" அல்லது "உடற்பயிற்சி" என்று சொல்வேன். என் ஆழ்ந்த பாரபட்சத்தை என் பதில் வெளிப்படுத்தியது. வேலை செய்வதை விட விளையாடுவதை விரும்பினேன். உண்மையாக சொல்லப்போனால், "ஏன்" என்ற ஆழமான கேள்விகளை பற்றிய என் தத்துவப்பூர்வமான சிந்தனைகளெல்லாம் நீண்ட பாதையில் பள்ளிக்கு நடந்து செல்லும் போது, நான் சர்கஸ்ஸில் ஒரு கயிற்றில் நடப்பது போல நடித்துக்கொண்டு விளையாடும் போது தான் ஏற்பட்டன. வார இறுதி நாட்களில் விளையாடுவதற்காகவே ஐந்து நாட்கள் நான் செய்ய விரும்பாதவற்றை செய்யும் இந்த வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன என்று என்னையே கேட்டு கொண்டிருக்கிறேன். பள்ளி துவங்குவதற்கு முன், ஒரு மணி நேரம் முன்னமே நான் பள்ளிக்கு சென்று விடுவேன். என் படிப்பை சீக்கிரமாக துவங்குவதற்காக அல்ல, ஆனால், மணி அடிக்கும் முன் ஒரு மணி நேரம் மைதானத்தில் விளையாடுவதின் மூலம் மகிழ்ச்சியாக இருந்து, இந்த தினசரி ஒழுங்கிலிருந்து "ஆதாயப்படுத்தலாம்" என்பதற்காக. தேவைப்படும் வேலை நேரங்களிலிருந்து முக்கியமான நிமிடங்களை விளையாடுவதற்காக மீட்பது தான் எனக்கு நேரத்தை ஆதாயப்படுத்துவதாக இருந்தது. "நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தை ஆதாயப்படுத்த" (எபே. 5:16) பவுல் அபோஸ்தலர் தன் வாசகர்களுக்கு எழுதும்போது நான் பயிற்சி செய்ததை அவர் மனதில் வைத்து சொல்லவில்லை என்று நான் புரிந்துக் கொண்டேன். கிறிஸ்துவின் ராஜ்யத்தின் பணிக்காக நமது நேரத்தை பிரயோஜனப்படுத்த சொல்லப்பட்ட ஒரு புனிதமான அழைப்பை தான் அவர் கொடுத்தார். Coram deo: தேவனின் முகத்திற்கு முன் வாழுதல் உங்கள் நேரத்தை தேவனின் ராஜ்யத்திற்காக பிரயோஜனமாக பயன்படுத்துகிறீர்களா? Copyright © Ligonier Ministries. ஆர்.சி.ஸ்ப்ரௌலின் இலவச புத்தககம் ஒன்றை Ligonier.org/freeresource இல் பெறுங்கள்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Using Your Time for God

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது பற்றி ஆர்.சி. ஸ்ப்ரௌலின் நான்கு நாள் தியானம். ஒவ்வொரு தியானமும் நீங்கள் தேவனின் பிரசனத்தில் வாழ, தேவனின் அதிகாரத்தின் கீழ் வாழ, தேவனின் மகிமைக்காக வாழ உங்களை அழைக்கிறது.

இந்த திட்டத்தை வழங்குவதற்காக Ligonier Ministries க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல்களுக்கு, Ligonier.org/freeresource க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்