திட்ட விவரம்

உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள்.மாதிரி

Breathe Spiritual Passion Into Your Marriage

7 ல் 1 நாள்

“மாமனாராக தேவன்” இது எனக்கு ஒரு எச்சரிக்கையாக வந்தது. வெளிப்படையாக சொல்லப்போனால், அப்போது எனக்கு ஒரு எச்சரிக்கை தேவைப்பட்டது. நான் ஒரு இளம் கணவனாக இருந்தேன். ஊக்கமாக ஜெபித்துக்கொண்டிருக்கும் போது, லீசா என் மனைவி மட்டும் அல்ல, அவரது மகளும் கூட, எனவே நான் அவளை அதற்கு ஏற்றாற்போல் நடத்த வேண்டும் என்று தேவன் என்னிடம் நேரடியாக சொல்வது போல் உணர்ந்தேன். இது ஒரு வெளிபாட்டின் தருணமாக எனக்கு இருந்தது. நான் சொந்த பிள்ளைகள் பெற்ற போது இந்த ஆழ்ந்த அறிவின் வலிமை அதிகரித்தது. என்னிடம் நல்ல பெயருடன் நீங்கள் இருக்க விரும்பினால் என் பிள்ளைகளில் ஒருவருக்கு நல்லவராக இருங்கள். மாறாக, உண்மையிலேயே என்னை கோபப்படுத்த வேண்டுமென்றால், நீங்கள் என் பிள்ளைகளிடம் வம்பு செய்யுங்கள். அவர்களை இழிவாக நடத்துங்கள். உங்கள் பெயரை மட்டும் சொன்னாலே என் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஏனென்றால் நீங்கள் என் பிள்ளைகளிடம் வம்பு செய்வதை விட என்னிடம் வம்பு செய்வதே பரவாயில்லை. எனவே நான் தேவனின் மகளை திருமணம் செய்திருக்கிறேன் என்று உணர்ந்ததுமே திருமணத்தை நான் பார்த்த விதமே மாறி விட்டது. பெண்களே, நீங்கள் தேவனின் மகன்களை திருமணம் செய்துள்ளீர்கள். தேவன் என் மனைவியாகிய தன் மகளுக்காக பரிவுகொள்கிறார். என் சொந்த மகள்களைப் பற்றி நான் பரிவுகொள்வதை விட மிகவும் பரிசுத்தமாகவும் அதிக வாஞ்சையோடும் பரிவுகொள்கிறார். திடீரென, என் திருமணம் என்பது இனி என்னையும் இன்னொரு நபரையும் பற்றியது என்றல்லாமல், வாஞ்சையோடு அக்கறை கொள்ளும் மூன்றாம் பங்குதாரரும் சேர்ந்த உறவு என்று ஆகிவிட்டது. இனியுள்ள என் வாழ்நாள் முழுவதும் தேவனை நான் ஆராதிக்கும் முக்கிய விதங்களில் ஒன்று அவரது தெய்வீக மனதில் எப்போதுமே , "அவரது சிறிய பெண்" ஆக இருக்கும் ஒரு பெண்ணை பாதுகாப்பதுதான் என்று உணர்ந்தேன். ஒரு அற்புதமான மற்றும் உண்மையான கோட்பாடாகிய தேவனின் தந்தை தன்மையை போதகர்கள் தியானிப்பதை நாம் பெரும்பாலும் கேட்கிறோம். ஆனால் உங்கள் திருமண வாழ்க்கையை மாற்ற வேண்டுமென்றால், இந்த ஒப்புமையை இன்னும் நீட்டித்து தேவனை உங்கள் மாமனாராக யோசித்து சிறிது நேரம் செலவிடுங்கள். ஏனென்றால், நீங்கள் ஒரு விசுவாசியை திருமணம் செய்தால், அது நிஜம் தானே! உங்கள் துணைவரை தேவனின் மகன்/மகளாக எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது அவருடன் உங்கள் உறவை (நடவடிக்கைகளையும் அணுகுமுறைகளையும்) எப்படி மாற்றுகிறது?
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Breathe Spiritual Passion Into Your Marriage

கேரி தாமஸ் அவர்களின் புதிய புத்தகமாகிய "A Lifelong Love" லிருந்து எடுக்கப்பட்ட இவை திருமணத்தின் நித்திய நோக்கங்களைப் பற்றி பேசுகின்றன. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உயிரை பரப்பும் ஒரு ஊக்கமூட்டும் உறவாக உங்கள் திருமண வாழ்வை ...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://www.dccpromo.com/a_lifelong_love/ க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்