திட்ட விவரம்

பயத்தை நீக்குங்கள்மாதிரி

Get Rid Of Fear

3 ல் 1 நாள்

உங்கள் மனதிலும் எண்ணத்திலும் சாத்தான் கட்டி வைத்திருக்கும் பயக் கோட்டையை எப்படி தகர்ப்பதென கற்றுக்கொள்ளத் தயாரா? இயேசு உங்களுக்கான பதிலை தந்துவிட்டார். உங்கள் முன்னுரிமைகளை மாற்றுவதின் மூலம் அதனை தகர்க்க வேண்டும். மத்தேயு 6:33ல் "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்."
என்று சொன்னபோது இதைப் பற்றித்தான் கூறினார்.



இப்படியாக சொல்லாம், உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் பூமியில் தன் ராஜ்ஜியத்தை கட்ட தேவன் செய்யும் காரியங்களோடு உங்களை இணைத்துக் கொள்ள செலவிட்டால், வாழ்க்கையில் உங்களை பயமுறுத்தும் கலங்க வைக்கும் மற்ற காரியங்களை தேவன் பார்த்துக் கொள்வதாக வாக்களிக்கிறார். (34ஆம் வசனத்தில்) "ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்." என்று தேவன் அதனையே வலியுறுத்துகிறார்.



ஒரு நேரத்தில் ஒரு நாளைக்கு தேவையான கிருபையை தருகிறார். நாளைய தினத்தின் கிருபையை இன்று அவர் தருவதில்லை, உங்களுக்கு அது தேவையும் இல்லை. ஏன்? ஏனெனில் அவருடைய வார்த்தை சொல்லுகிறது, "நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது" (புலம்பல் 3:22‭-‬23). எனவே நீங்கள் நாளை என்ன நடக்கும் என கவலைப்பட்டு பயந்தால், நான் உம்மை நம்பவில்லை என தேவனிடம் கூறுகிறீர்கள். அவன் நம்பத்தக்கவர் அல்ல என்று கூறுகிறீர்கள். உங்கள் சுய எண்ணங்களை பயம் மற்றும் வேதனை நிறைந்த ஒரு சுழற்சிக்குள் அனுப்புகிறீர்கள், அது உங்கள் அடிமைய்தன பழக்கத்தை மேற்கொள்ள உதவாமல் அதிகரிக்கவே உதவுகிறது. நாளைய தினத்தைக் குறித்து பயப்படுதல் இன்றைய தினத்தின் சமாதானத்தையும் வெற்றியையும் இழக்க வைக்கும். எனவே பயத்தை விட்டுவிடுங்கள்.



கிருபையுள்ள கர்த்தாவே, என் எண்ணங்களில் பயம் உருவாகையில் அதை கவனிக்க உதவி செய்யும். அது வளர்ந்து பெருகும் முன் அதனை மேற்கொள்ள உதவும். எது சரி எது தவறென பகுத்தறியும் ஞானத்தை தாரும், நீர் என்னை தாங்குகிறீர் என விசுவாசிக்க கிருபை செய்யும். என் பயங்களை உம்மிடம் ஒப்படைக்க விரும்புகிறேன், அதை தினந்தோறும், எல்லா நாளும் தயை செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமேன்.



இந்த வாசிப்புத் திட்டமும் ஜெபமும் பிடித்திருந்ததா? இதே தலைப்பில் ஆழமாக கற்றுக்கொள்ள டோனி இவான்ஸ் அவர்களின் தரவிறக்கம் செய்யக்கூடிய 3 mp3 செய்திகளை பரிசளித்து உங்களை ஊக்குவிக்கிறோம். இந்த இணைப்பில் சென்று பாருங்கள்  
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Get Rid Of Fear

நீங்கள் பயத்தை மேற்கொள்ளலாம். மரு. டோனி இவான்ஸ் அவர்கள் இந்த ஆழமான புரிந்துகொள்ளல் உடைய வாசிப்புத் திட்டத்தின் மூலம் விடுதலையின் பாதைக்கு வழிகாட்டுகிறார். இதில் சொல்லப்படுகிற கருத்துகளை வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தும் ப...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய ஹார்வஸ்ட் ஹவுஸ் வெளியீட்டாலருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: http://go.tonyevans.org/addiction க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்