திட்ட விவரம்

கர்த்தரின் குரலைக் கண்டறிதல் // அவரைச் சந்திக்கக் கற்றறிதல்மாதிரி

Recognizing God's Voice // Learn to Encounter Him

4 ல் 1 நாள்

கடினமான பாதையில் பயணிக்கையில்

நம் உள்ளத்தில் வசிக்கும் தூயாவியானவர், எமது வழியாக உனக்குச் சொல்ல விரும்பும் செய்தி இதுதான்

முன்பு இருந்ததைப் போலவே, இதுவும் இன்னொரு கடினமான நாளாக இருக்கலாம். ஆம், எனக்குப் புரிகிறது. இந்தச் சூழலைத் தலைகீழாக மாற்றிட, நீ ஓர் உதவியை எதிர்பார்க்கிறாயா? எல்லாவற்றையும் தூக்கி வீசி எறிந்துவிட்டு, உனது கைகளை, இதயத்தை உயர்த்தி, போதும், இனி என்னால் தாங்க முடியாது எனச் சரணாகதி அடைய விரும்புகிறாயா? ஆம், உனது நிலை எனக்குத் தெரிகிறது. நான் ஏற்றுக் கொள்கிறேன். உன்னால் முடியாது. இதே நிலையில் உன்னால் தொடர்ந்து வாழவும் முடியாது. எனது துணையின்றி நீ தனித்துப் போராட முடியாது. வெறும் நம்பிக்கை - சுதந்திரம், என வெற்றுப் போதனைகள் மட்டும் போதுமானதல்ல. நல்லது, அதனால்தான், நீ இங்கே எனது அருகில் அமர்ந்து, என் வார்த்தைகளைக் கவனமாகக் கேட்கின்றாய். உனது சுய சக்தியோடு போராடி, நீ களைத்து விட்டாய். உனது வாழ்க்கை காரியங்களை மாற்றி அமைக்க முயற்சி செய்து அவை நடக்காததால் சோர்ந்துவிட்டாய். உண்மையில் நீ சோர்வாக இருக்கிறாய். உனது முயற்சிகள், எதாவது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திவிடாதா? எனப் பார்த்து வியந்து நிற்கிறாய்.


எனது அருமை குழந்தாய், நினைவில் கொள், நான்நன்மை செய்பவர்.நான்போதுமானவர்.


நீ என்னோடு இணைந்திரு. உனது நிலைமையை மேற்கொள்ள, வேறு பாதையைக் காட்டுகிறேன். நான் உனது போராட்டங்களை மறைத்து, அவை இல்லாதது போலவும், எல்லாமே நன்றாகவும், அழகாகவும் இருப்பதைப் போலவும், உன்னைக் கற்பனை செய்யச் சொல்லப் போவதில்லை. உண்மையில், இந்த உலகில் தீமையும் இருக்கிறது. தீய சக்தி செயல்படுகிறது. அது உன்னைத் திசை திருப்பி, நன்மை செய்யவிடாமல் தடுத்து, நல்லவை செய்வதிலிருந்து உன்னை விலக்குகிறது. ஆம், வாழ்க்கை கடினமானது. மிகக் கடினமானது.


ஆனால், நான் நன்மை செய்பவர்.நான்நல்லவர்.நான்போதுமானவர்.


எனதருமை மகளே, மகனே, இந்தக் குழப்பத்தின் மத்தியில் உன்னால், என்னைக் காண முடிகிறதா? ஒரு வேளை உனது சூழ்நிலைகள் மேம்படாமல் இருக்கக்கூடும், ஆனால் உனது மனவலிமை நிச்சயமாக உறுதிப்படும். உனது இதய வலி உன்னை நசுக்கி அழித்துவிடுவது போலத் தோன்றலாம், ஆனால் அது நடக்காது. உன்னால் தாங்கமுடியாத அளவிற்குத் துயரத்தின் வலியை அதிக பாரமாக உணரலாம். ஆனால், நான் ஏந்துவேன். நான் சுமப்பேன். உண்மையில் நான் உன்னைப் பெற்றெடுத்தேன்.


சரி, இந்தக் கடினமான சூழலை எப்படிக் கையாள்வது? பிரச்சனையை மிகப் பெரிதாக உணர்கிறாய். அதன் விளைவை உன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தப் பேரழிவும், இப்போதைக்கு முடியாதது போலவும் தோன்றுகிறது. நீ என்ன செய்வாய்? முதலில், நான் உன்னைப் பிடிக்கட்டும். நான் உன்னோடு இருக்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன். உன் மீதான என் அன்பு உன்னைத் தாங்கும். அந்த அன்பின் சக்தி உன்னை நிற்கச் செய்யும்.


எனதருமை தைரியசாலியே, தொடர்ந்து முன்னேறு. என்னைத் தொடர்ந்து விசுவாசத்துடன் உறுதியாகப் பற்றிக்கொள். இந்தப் பிரச்சனை, கடினமான சூழல், வலி இவற்றைக் கண்டு நான் கலங்குவதில்லை. இதை கடந்து செல்லும் வழி எனக்குத் தெரியும். என் கையை இறுகப் பற்றிக் கொள். நான் உன்னை உறுதியாகப் பிடித்திருக்கிறேன். நாம் ஒன்றாக அக்கனியையும் கடந்து செல்லலாம். நீ விரும்பினால் உனது உள்ளத்தைப் பாதுகாப்பேன். நீ என்னால் பாதுகாக்கப்பட விரும்பனால், நான் உன்னைத் தாங்குவேன். சுமப்பேன். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை. நான் உன்னைப் பின் தொடர்கிறேன். நீ எனக்குப் பிரியமானவள். இந்த உலகில் தங்கள் கனவுகளை நிறைவேற்றிய மற்றவர்களை விட, உன்னால் மிகப் பெரிய காரியங்களை செய்ய முடியும். ஏனெனில், நீ எனது கனவு. நான் கனவு காண்பவன். அது எனது தொழில். உன்னைக் குறித்து எனக்கு ஒரு கனவு உண்டு. அதை நான் நிஜமாக்குவேன்.


மனப் பயிற்சி

கர்த்தர், உங்கள் நல்ல தந்தை, உங்களை எந்த சூழலிலும் நேசிப்பவர், உங்களோடு கூட இங்கே - இப்போது இருக்கிறார் என உங்களது இருதயம் நம்புவதற்கு, நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


நான் அக்கினியின் வழியாக நடந்து சென்றாலும், இயேசு என்னோடு இருக்கிறார் என்பதை, எனது உள்ளம் உணர்ந்து நம்பிக்கை கொள்வதற்கு நான் செய்ய வேண்டியது என்ன?


அவர் என்னுடன் இருப்பதை, எனது தோள்களில் கைவைத்து என்னை விட்டு விலகாமல் இருப்பதை எப்போதிலிருந்து நான் பார்க்கப் போகிறேன்?


இயேசு எங்கே இருக்கிறார் என சில நொடிகள் கற்பனை செய்து பாருங்கள். உண்மையில் அவரைப் பார்க்க முயலவும். அவரது பிரசன்னம் உங்கள் மத்தியில் இருப்பதை அனுபவித்து உணர்ந்து பாருங்கள். அவர் என்ன செய்கிறார் எனக் கற்பனை செய்து பார்க்கவும். உங்கள் கடினமான இந்த சூழல் குறித்து, நீங்கள் அக்னியின் பாதையில் நடந்து செல்வதைக் குறித்து அவர் என்ன சொல்கிறார் எனக் கற்பனை செய்து பாருங்கள்.


அவர் உங்களுக்குப் புதியதொரு தரிசனத்தை அருளட்டும். அவர் உங்களோடு இருக்கிறதைக் குறித்த தரிசனம் - ஒவ்வொரு நொடியும் அவர் உங்களோடு இருப்பதை


அவர் எப்படி உங்களைப் பாதுகாக்கிறார் எனும் தரிசனக் காட்சியை நீங்கள் பார்க்கட்டும்... அவர் எத்தனை நல்லவர்... அது எத்தனை அழகுஇல்லைஅது பகிர்ந்து கொள்ள முடியாத பேரன்பு.


வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Recognizing God's Voice // Learn to Encounter Him

தேவனின் சத்தம் மென்மையான கிசுகிசுப்பாகவோ அல்லது கடும் புயல் காற்றாகவோ இருக்கக்கூடும். முக்கியமானது என்னவென்றால், அது எப்படி வெளிப்பட்டாலும் அதை அடையாளம் காண்பதே - அத்துடன் அவர் நன்மை செய்பவர் என உறுதியாக நம்புவது. ஆம், ந...

More

இந்தத் திட்டத்தை அளித்த "கேதர்" ஊழியங்களுக்கு (வளையம்/கம்பி) நன்றியை அறிவிக்க விரும்புகிறோம். மேலதிக தகவலுக்கு: https://rushpodcast.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்